நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது

0 5017
நவராத்திரி பண்டிகையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பண்டிகையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் நவராத்திரி பண்டிகை அஷ்டமி, மகா நவமியுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கொண்டாட்டங்கள் களை கட்டின. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள காமகயா மலைக் கோவிலில் துர்க்கை அம்மன் சிலைக்கு அஷ்டமி வழிபாடுகள் செய்யப்பட்டன.

ஹைதராபாத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குடங்களை வைத்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். கொல்கத்தாவில் உள்ள துர்கா பந்தலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நடிகையும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் மேள தாளங்கள் முழங்க நடனமாடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டார்.

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள ஒரு குடும்பத்தினர் சுமார் 500க்கும் மேற்பட்ட பொம்மைகளுடன் தங்கள் வீட்டில் கண்கவரும் நவராத்திரி கொலு வைத்திருந்தனர். மைசூர் அரண்மனை, யானைகள் சவாரி, சீனாவின் பாரம்பரியம் மிக்க பௌத்த ஆலயங்கள், கண்ணனின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் என்று அந்த கொலுவில் பலவகையான பொம்மை உருவங்கள் கண்களைக் கவர்ந்தன

இன்று நாடு முழுவதும் ஆயுதப் பூஜையும் சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாகனங்களையும் தொழில் கருவிகளையும் கழுவி சுத்தம் செய்து பூஜைகளை செய்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் சரஸ்வதியை வணங்கி வழிபாடு செய்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments