பிஞ்சில் பழுத்த கிரிமினல் ரூ.7.5 லட்சம் அபேஸ் செய்த சிறுவன்..!

0 12242
சென்னை - அண்ணாநகரில் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர், எதிர்பாராத விதமாக ஏழரை லட்சம் ரூபாயை பறி கொடுத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன், போலீ சில் பிடிபட்டுள்ளான்.

சென்னை - அண்ணாநகரில் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர், எதிர்பாராத விதமாக ஏழரை லட்சம் ரூபாயை பறி கொடுத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன், போலீ சில் பிடிபட்டுள்ளான்.

இரக்கப்பட்டு உதவி செய்தால், வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும் என்ற நிலை மாறி, வீடு தேடி துன்பம் வந்து சேரும் என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. 75 வயது ஓய்வு பெற்ற மருத்துவர் முருகேசன் என்பவர், அண்ணாநகரில் தனியாக வசித்து வருகிறார். இவர், தனக்கு உதவியாக ஒரு பெண்ணை வீட்டில் தங்க வைத்திருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக முருகேசனை அவரது மகள், தனது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

இந்த சூழலில், முருகேசனின் வங்கி கணக்கில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்பட்ட விவரம், அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் வந்தது. சைபர் கிரைம் உதவியை நாடிய முருகேசனுக்கு, பணத் திருட்டில் ஈடுபட்டது, தனது வீட்டில் தங்க வைத்திருந்த பெண்ணின் 17 வயது மகன் என்பது தெரியவந்தது.

கடந்த மார்ச் மாதம் தனது செல்போனில் பழுது ஏற்பட்டதால், சிறுவனின் தாயார் செல்போனை வாங்கி, முருகேசன், நெட்பேங்கிங் பயன்படுத்தியுள்ளார்.

பப்ஜி விளையாட்டுக்கு அடிமை ஆன இந்த சிறுவன், தனது தாயாரின் செல்போனில் பதிவாகி இருந்த User Name மற்றும் Password-ஐ பயன்படுத்தி, பே- டிஎம் மூலம் லேப்- டாப், ஐ-போன் என விலை உயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளதாக, சொல்லப்படுகிறது.

இதுதவிர, பப்ஜி ஆன்லைன் விளையாடுவதற்கு தேவையான, பப்ஜி ஆயுத தளவாடங்கள் வாங்குவதற்கு மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இந்த சிறுவன் செலவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஏழரை லட்சம் ரூபாய் வரை திருடிய சிறுவனிடம் விசாரணை நடத்தி வரும் சென்னை - சைபர் கிரைம் போலீசார், உஷாராக இல்லா விட்டால், பிஞ்சில் பழுத்த கிரிமினல்களிடம் பணத்தையும், நிம்மதியையும் இழக்க நேரிடும் என பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments