இந்திய எல்லைக்குள் வழி தவறி நுழைந்த சீன வீரர் சீன ராணுவத்திடம் பத்திரமாக ஒப்படைப்பு

0 1580
இந்திய எல்லைக்குள் வழி தவறி நுழைந்த சீன வீரர் சீன ராணுவத்திடம் பத்திரமாக ஒப்படைப்பு

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரர் வாங் நா லாங், சீன ராணுவ அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். 

கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் பிரிவில், கட்டுப்பாட்டு எல்லையை தாண்டி வந்த அவர் கடந்த 19 ஆம் தேதி  இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்ட நிலையில், தங்களது வீரரை திரும்ப ஒப்படைக்குமாறு சீன ராணுவம் கேட்டுக் கொண்டது.

உள்ளூர் மேய்ப்பர்களுக்கு உதவ வந்த அவர் தவறுதலாக இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாகவும் சீன ராணுவம் விளக்கம் அளித்த நிலையில் அவர் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments