சென்னை விமான நிலையத்தில் ரூ.44.4 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

0 1031

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 44 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய 842 கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்து 2 பேரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரகசிய தகவலின்பேரில் சிவகங்கையை சேர்ந்த சையது முகமது புகாரி என்பவரிடம் சோதனை நடத்தி, உடலில் பதுக்கி வைத்த 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய தங்க பேஸ்டை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அலியிடம் இருந்து 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய தங்க பேஸ்டை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments