நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

0 2149
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது...

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.

கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு, கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது.

மருத்துவம், பல் மருத்துவம் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுத, 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 85 சதவிகித மாணவர்கள் மட்டுமே 13ம் தேதியன்று தேர்வு எழுதி இருந்தனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

அதையடுத்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு என, இரண்டாவது கட்டமாக கடந்த 14ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.

முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,16ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments