கம்யூனிஸ்ட் கூட்டத்தில் இருமியபடியே பேசிய அதிபர் ஜி ஜின்பிங்... கொரோனா பாதிப்பா? கேள்விக்குறியுடன் சர்ச்சையைக் கிளப்பும் சீன ஊடகங்கள்

0 1830
கம்யூனிஸ்ட் கூட்டத்தில் இருமியபடியே பேசிய அதிபர் ஜி ஜின்பிங்... கொரோனா பாதிப்பா? கேள்விக்குறியுடன் சர்ச்சையைக் கிளப்பும் சீன ஊடகங்கள்

கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் பலமுறை இருமியதால், கொரோனா தொற்றுப் பரவியிருக்குமோ என்ற பரபரப்பு எழுந்தது.

அடிக்கடி இருமியதால் அவ்வப்போது பேச்சை நிறுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சியைப் படம் பிடித்த அரசுத் தொலைக்காட்சி தனது கேமராவை வேறு பக்கம் திருப்பிவிட நேரிட்டது. தொடர் இருமலுடன் அதிபர் ஜின்பிங் தண்ணீர் குடிப்பதை பத்திரிகைகள் படம் எடுத்துப் போட்டன.

கொரோனா பரவிய போது பொதுஇடங்களுக்குச் செல்லாமல் பாதுகாப்பான இடத்தில் இருந்தவர் ஜி ஜின்பிங். அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரிசையில் ஜின்பிங்கையும் கொரோனா தொற்று தாக்கியுள்ளதா என்று சீன ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments