பிரான்சில் வீசும் கொரோனா அலை; மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு..!

0 1277
பிரான்சில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மீண்டும் கொரோனா அலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, நான்கு வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தொடர்ந்து புதிய பொது சுகாதார அவசர நிலையை பிறப்பித்த அதிபர் அடுத்த நடவடிக்கையாக ஊரடங்கு முடிவை எடுத்துள்ளார். பாரிஸ் உள்ளிட்ட 5 நகரங்களில் வரும் 17 ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஊரடங்கு பகுதிகளில் மக்கள் இரவு நேரத்தில் உணவு விடுதிகளுக்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ள அவர், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளார். ஊரடங்கை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 11500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments