ரயில் பயணங்களின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஓராண்டு சிறை- ரயில்வே நிர்வாகம்

0 1091
ரயில் பயணங்களின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஓராண்டு வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பு- ரயில்வே நிர்வாகம்

ரயில் பயணங்களின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பண்டிகைக் காலங்களுக்கான புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணங்களுக்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பயணிகள் அனைவருக்கும் மாஸ்க் அணிவதும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயணிகள் பின்பற்றாவிட்டால், 500 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments