தனசேகரனை வெட்டியது ஏன்? - பொன்னுவேல் வாக்குமூலம்

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் வெட்டியதாக தனசேகரனை வெட்டியவர் போலீஸாரிடத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தி.மு.க. தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர் தனசேகரன் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டின் ஒருபகுதியில் அலுவலகம் வைத்துள்ளார். இங்கு பணியாற்றும் அமுதாவுக்கும் கணவர் பொன்னுவேல் என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று நண்பர் மணிவண்ணனுடன் வந்த பொன்னுவேல், அமுதாவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த தனசேகரனுக்கும் வெட்டு விழுந்தது.
இருவரும், வடபழனி சூர்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே , தனசேகரனின் ஆதரவாளர்கள் பொன்னுவேலையும், மணிவண்ணனையும் விரட்டிச் சென்று எம்.ஜி.ஆர் நகரில் வைத்து தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தகவலறிந்து வந்த கே.கே.நகர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்கள் என் மனைவி அமுதா வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். பொனுவேல், பல முறை தனசேகரனின் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைத்தும் அமுதாவை செல்லவில்லை . கொரோனா காலம் என்பதால் அலுவலகத்திலேயே தங்கி பணி செய்து வருவதாக அமுதா கணவர் பொன்னுவேலிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து பொன்னுவேல் நண்பர் மணிவண்ணனுடன் தனசேகரன் வீட்டுக்கு சென்று அமுதாவை வெட்டியுள்ளார். தடுக்க வந்த தனசேகரையும் வெட்டியதாக பொன்னுவேல் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments