பாலியல் வழக்குகளில், சட்ட விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

0 852
பாலியல் வழக்குகளில், சட்ட விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

பாலியல் வன்முறை வழக்குகளில், உரிய சட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எஃப்ஐஆர் பதிவு, தடயவியல் ஆய்வுக்காக சான்றுகளை சேகரித்தல், பாலியல் வன்முறை நடைபெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான உடனடி பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், 2 மாதங்களில் விசாரணையை நிறைவு செய்தல், குற்றவாளிகளை அடையாளம் காண பாலியல் அத்துமீறல் நபர்களின் தேசிய டேட்டாபேஸை பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

காவல் நிலைய எல்லையைக் காட்டி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட பெண் அணுகும்போது வேறு காவல்நிலையை எல்லை என்றாலும் எண்ணிடப்படாத ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments