ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதிகேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி தி.மு.க. மகளிரணி பேரணி... கனிமொழி உள்ளிட்டோர் கைதாகி விடுதலை

0 1843
ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதிகேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி தி.மு.க. மகளிரணி பேரணி... கனிமொழி உள்ளிட்டோர் கைதாகி விடுதலை

திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க மாவட்டம்தோறும் சிறப்பு தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தி.மு.க மகளிர் அணி பேரணியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து திமுக மகளிரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments