துபாயில் திறக்கப்படும் உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று

0 4492
உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று துபாயில் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று துபாயில் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகிறது.

துபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்பட இருக்கும் இந்த நீரூற்று ‘தி பாய்ண்ட்’ என அழைக்கப்படுகிறது. புதிய நீரூற்று கடல் பகுதியில் 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் 105 மீட்டர் உயரம் வரை செல்லும். 3 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பல வண்ணத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.

இந்த நீரூற்றில் 5 வெவ்வேறு வகையான வடிவில் நிகழ்ச்சிகள் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் நடக்கும். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த நிகழ்ச்சியினை பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments