உலகில் உள்ள மிகப் பெரிய இயந்திரங்களில் ஒன்றான RWE ஏலத்திற்கு வருகிறது

0 2804
உலகில் உள்ள மிகப் பெரிய இயந்திரங்களில் ஒன்றான RWE ஏலத்திற்கு வருகிறது

உலகில் உள்ள மிகப் பெரிய இயந்திரங்களில் ஒன்றாக கருதப்பட்ட ஜெர்மனியில் உள்ள சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர் டபிள்யூ ஈ எனப்படும் அந்த இயந்திரம் 492 அடி நீளம், 4 ஆயிரம் டன் எடையுடன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது.

கடந்த 1959ம் ஆண்டு முதன் முதலாக பயன்பாட்டுக்கு வந்த அந்த இயந்திரம் கடந்த 2001ம் ஆண்டுவரை முழு வீச்சில் தனது பணியை திறம்படச் செய்து வந்தது.

தற்போது நெதர்லாந்து, பெல்ஜியம் எல்லையில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி வரும் அந்த இயந்திரத்தை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஜெர்மனியைச் சேர்ந்த ஏல நிறுவனம் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments