48ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தில் காணாமல் போன இரு புத்தகங்கள் மீட்பு : தாமதத்திற்கான அபராதமாக 7,91,660 ரூபாய் பெற முடிவு

0 849
48ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தில் காணாமல் போன இரு புத்தகங்கள் மீட்பு : தாமதத்திற்கான அபராதமாக 7,91,660 ரூபாய் பெற முடிவு

இங்கிலாந்து நாட்டில் நூலகம் ஒன்றில் 48ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இரு புத்தகங்கள் மீண்டும் பத்திரமாக திரும்ப பெறப்பட்டன.

Hampshire பகுதியில் உள்ள Basingstoke Discovery Center மைய ஊழியர் கூறுகையில், நூலகத்தில் உறுப்பினராக இருந்த ஒருவர் கடந்த 1972ஆம் ஆண்டு இரு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளார்.

ஆனால் அந்த புத்தகங்களை அவர் திரும்ப ஒப்படைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காணாமல் போன அந்த இரு புத்தகங்களும் மன்னிப்பு கடிதத்துடன் நூலகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தன.

இதனை பெற்றுக் கொண்ட நூலக அதிகாரிகள் தாமதத்திற்கான அபராத தொகையாக 7லட்சத்து 91ஆயிரத்து 660ரூபாய் பெற முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments