அறிவியல் ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளையும் மத்திய அரசு ஊக்குவிப்பதாக, பிரதமர் மோடி உறுதி.....

0 887
அறிவியல் ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளையும் மத்திய அரசு ஊக்குவிப்பதாக, பிரதமர் மோடி உறுதி.....

அறிவியல் வளர்ச்சியில் புதுமையை மேம்படுத்த இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களுக்கான வைபவ்' என்ற பெயரில் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் பலர் தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கினர்.

அணு சக்தியை அதிகரிக்க புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் பல வரலாற்றுக் கேள்விகளுக்கு விஞ்ஞானத்தின் மூலமாக விடை கிடைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி தமது காணொலி உரையில் தெரிவித்தார்.

இந்தியாவின் பண்டைய வரலாறு என்பது பல விஞ்ஞானிகளைக் கொண்டுள்ளது என்றும், சுயசார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகளை செய்து வருகிறோம் என்றும்அவர் கூறினார். மனிதனின் வளர்ச்சிக்கு விஞ்ஞானம் அடிப்படை என்றும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments