பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ரபேல் நடால், டோமினிக் தீம் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

0 475
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ரபேல் நடால், டோமினிக் தீம் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்கள் ரபேல் நடால், டோமினிக் தீம் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பாரீசில் நடைபெற்று வரும் தொடரின் இரண்டாவது சுற்றில், ரபேல் நடால் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை எதிர்கொண்டார். அதில், 6-1 6-0 6-3 என்ற செட் கணக்கில் நடால் எளிதாக வெற்றி பெற்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்ற ஆஸ்திரியாவின் டோமினிக் தீம், 6-1, 6-3, 7-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜாக் சோக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் பிரிவில் அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ கப் டபுள் பால்டில் ஈடுபட்டதால், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டு இத்தாலியைச் சேர்ந்த மார்டினா ட்ரெவிசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனிடையே, குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments