ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0 1632
ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில், பொறுப்புடன் விளையாடி பேர்ஸ்டோ 53 ரன்களையும், வார்னர் 45 ரன்களையும் சேர்த்தனர்.

அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 41 ரன்களை சேர்க்க, ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுக்க, அதிகபட்சமாக தவான் 34 ரன்களை சேர்த்தார்.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் மட்டுமே எடுக்க, ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments