போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத் சிங்கிடம் நாளை விசாரணை ?

0 906
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் நாளை ஆஜராகிறார்.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் நாளை ஆஜராகிறார்.

தமிழில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் அயலான், கமலின் இந்தியன் 2 படங்களிலும் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகை ஆவார்.

ஒன்று இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியாவின் தோழி ஆவார்.

அந்த வகையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங் இன்று காலை வரை தனக்கு சம்மன் வரவில்லை என்று கூறி வந்தார். ஆனால் தற்போது தனக்கு சம்மன் கிடைத்துள்ளதை ரகுல் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அவரிடம் நாளை விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments