திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை

0 5107
திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை

திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு அவரது ஆதரவாளர் திமுக உறுப்பினர் அட்டை வாங்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. திமுக சார்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் ஆன்லைனில் யாரை வேண்டுமானாலும் திமுகவில் உறுப்பினராக்க முடியும் சூழல் நிலவுகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை திமுகவில் சேர்த்து உறுப்பினர் அட்டை பெற்றனர்.

இந்த நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த திமுக முன்னாள் பிரமுகர் கபிலன் என்பவர், ஆன்லைனில் விண்ணப்பித்து மு.க.அழகிரியை திமுகவில் உறுப்பினராக்கியுள்ளார்.

திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆட்டோ ஜெனரேட் முறையில் நடைபெறுவதால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments