இங்கிலாந்தில் 3 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

0 995

3 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் திருடப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான அரிய புத்தக தொகுப்புகளை, ஐரோப்பிய நாடான ருமேனியாவில் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

ருமேனியாவை சேர்ந்த கடத்தல் கும்பல், இங்கிலாந்தின் Feltham நகரில் உள்ள கிடங்கின் மேற்கூரையை துளையிட்டு, பாதுகாப்பு சென்சார்களில் சிக்காமல், ஐசக் நியூட்டன், கலிலியோ உள்ளிட்ட விஞ்ஞானிகள் எழுதிய 200 புத்தகங்களின் முதல் பதிப்பை திருடி சென்றனர்.

இது தொடர்பாக, பல நாடுகளில், 45 க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய போலீசார், இறுதியாக ருமேனியாவில், ஒரு வீட்டின் பாதாள அறையில் புத்தகங்களை கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments