சென்னையில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு..!

0 1276
சென்னையில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு..!

கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில், தற்போது படிப்படியாக உயிரிழப்பும், பாதிப்பும் குறைந்து வருவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

சென்னையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரம் வரை எட்டியது. தற்போது இந்த எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்குப் பின்னரும், சென்னையில் நாளொன்றுக்கு பத்தாயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ராயபுரம், திருவிக நகர் போன்ற மண்டலங்களில் ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 400 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நூறுக்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் ஜூன் மாதம் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு, ஜூலை மாத மத்தியில் 24 ஆயிரத்து 890 ஆக அதிகரித்தது.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 2 மாதங்களாக இந்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 883 ஆக குறைந்துள்ளது.

சோதனையை அதிகப்படுத்தியது, பாதிப்புக்குள்ளானவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தியது, காய்ச்சல் கேம்ப்புகளை அதிகப்படுத்தியது உள்ளிட்டவற்றால் தான் இது சாத்தியம் ஆனதாக தமிழக மருத்துவ வல்லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கை கழுவுதல் போன்றவையும் நல்ல பலனை கொடுத்துள்ளதாக கூறும் மருத்துவர்கள், அதனை தொடரும் பட்சத்தில் மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் என்கின்றர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments