பிரதமர் மோடி பிறந்தநாள் - நாடு முழுவதும் கொண்டாட்டம்..!

0 7296

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு இன்று 70வது பிறந்தநாள். இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனநாயகப் பாரம்பரியத்தையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் பேணிக்காப்பதில் நிகரற்று விளங்குவதாகவும், விலைமதிப்பற்ற சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜகவினர் ஒருவாரம் சேவை வாரமாகக் கொண்டாடுகின்றனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் 70 இடங்களில் அன்னதானம் வழங்குதல், சுகாதாரப் பணிகள், மரம் நடுதல் போன்ற நலப்பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், மோடியின் 70 ஆண்டு வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பார்வையிட்டார். 

டெல்லியில் மோடியின் பிறந்தநாளையொட்டி சைக்கிள் பேரணியை பாஜக எம்பி அருண் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ஒடிசா மாநிலம் பூரியில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோரின் வாழ்த்தை பெற்றுள்ள மோடியின் தலைமையில் இந்தியா ஆத்ம பலம் பெற்ற நாடாக விளங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான லட்டு தயாரிக்கப்பட்டு, கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது. 

புதுச்சேரி பா.ஜ.க.வினர், மத்திய அரசின் திட்டங்களை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒளிப் பலகைகளை கிராமப்பகுதிகளில் எடுத்துச் சென்றனர். 

குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தநாளையொட்டி பிரமாண்ட கேக் வெட்டிக் கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments