வீட்டு சாப்பாட்டு அறையில் பிடிபட்ட இரட்டை தலை பாம்பு

0 2643

தாய்லாந்து நாட்டில் அரியவகை இரட்டை தலை பாம்பு பிடிபட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து 35 மைல் தொலைவில் உள்ள நகோன் பதோம் எனுமிடத்தில் உள்ள வீட்டில் சாப்பாட்டு அறையில் வினோதமான சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அங்கு வசிப்போர் அறையில் சோதனை நடத்தியபோது, 12 அங்குல நீளத்துக்கு கருப்பு நிறத்தில் இரட்டை தலை பாம்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அது விஷத்தன்மையில்லாத பாம்பு என்பதை கண்டுபிடித்து, அதற்கு சாங் (Song) என்று பெயரிட்டு சிறிய மீன்கள், தவளைகளை உணவாக அளித்து அவர்கள் வளர்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments