ஹலோ ஆப்பில் பழக்கம்: காதலனால் மகள் கொலை ;அனாதையான மகன் -பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

0 6199

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெரு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 30 ) இவர், டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 10- ஆம் தேதி எழிலரசி என்ற பெண்னுடனும்  மனுஶ்ரீ (வயது 3 ) குழந்தையுடன் ராமதாஸ் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். பின்னர் , உத்திரிய மாதா வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி நேற்று மனுஸ்ரீயை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் மனுஶ்ரீ வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.. பின்னர் இறந்த குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே போட்டு விட்டு இவர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து வேளாங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர் .இதற்கிடையே , வேளாங்கண்ணி ஆர்ச் அருகே ராமதாஸ் நிற்பதாக கிடைத்த தகவலின்படி வேளாங்கண்ணி போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது, '' ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி எழிலரசியுடன் ராமதாசுக்கு தகாத உறவு இருந்துள்ளது. கடந்த மூன்று வருடத்திற்கு முன் மகேந்திரன் இறந்து போன நிலையில் எழிலரசிக்கு தீரன் பிரேவ் என்ற 5 வயது குழந்தையும் மனுஶ்ரீ என்ற இரு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ராமதாசுக்கும் எழிலரசிக்கும் 'ஹலோ ஆப்' மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராமதாசுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவி உள்ளார் .இந்த நிலையில் இருவரும் போன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர் வேளாங்கண்ணிக்கு அடிக்கடி வந்து தனிமையில் சந்தித்துள்ளனர் . மகன் தீரன் பிரனவை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, குழந்தை மனுஶ்ரீயை தன்னுடன் அழைத்து வருவது எழிலரசியின் வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வேளாங்கண்ணிக்கு ராமதாஸ் முன்னரே வந்து விட்டதாகவும் எழிலரசி தாமதமாக வந்துளார். பின்னர் , தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். தாமதமாக வந்தது தொடர்பாக, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது . குழந்தை மனுஸ்ரீயால்தான் தன்னால் எழிலரசியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று ராமதாஸ் நினைத்துள்ளார். மறுநாள் 11-ந் தேதி காலையில் ராமதாஸும் எழிலரசியூம் சந்தோசமாக இருந்த போது, குழந்தை அதற்கு இடைஞ்சலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராமதாஸ் குழந்தையை சரமாரியாக தாக்கி உள்ளார். அதில், குழந்தை மயக்கமடைந்து விழுந்துள்ளது.

உடனே குழந்தையை இருவரும் தூக்கிக்கொண்டு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர் .பின்னர், மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனுஶ்ரீ இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். பின்னர் குழந்தையின் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு இருவரும் விடுதியை காலி செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று தெரிவித்தனர்.

வேளாங்கண்ணி போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து ராமதாசையும் எழிலரசியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கெனவே தந்தைடிய இழந்து விட்ட சிறுவன் தீரன் பிரனவ், தாயும் சிறைக்கு சென்று விட்டதால் அனாதரவாக உள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments