பொறியியல் இறுதியாண்டு தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு

0 6900
பொறியியல் இறுதியாண்டு தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு

இறுதிப் பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2013-ம் ஆண்டுக்குப் பின் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து இறுதி செமஸ்டர் தேர்வு களில் தேர்ச்சி பெறாமலேயே படிப்பை முடித்துள்ள மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் வரும் 22- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வரும் 15- ஆம் தேதியில் இருந்து 17- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அதேநேரம், 2012ஆம் ஆண்டுக்கு முன்பு B.E சேர்ந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments