தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - மத்திய சுகாதார அமைச்சகம்

0 1568
தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - மத்திய சுகாதார அமைச்சகம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை வாரந்தோறும் 24 சதவீதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட மூன்றரை மடங்கு அதிகமாக, 29 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்றார்.

இதுவரை நான்கரை கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களில், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 70 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments