ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிமுறையைப் பயன்படுத்தும் வசதி அனைவருக்கும் இருக்கிறதா?மு.க.ஸ்டாலின் கேள்வி

0 929
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிமுறையைப் பயன்படுத்தும் வசதி அனைவருக்கும் இருக்கிறதா, தேவைப்படும் பொருளாதாரப் பின்புலம் உள்ளதா என்பதை அரசு ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆன்லைன் பாடம் படிப்பதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் உளுந்தூர்பேட்டை மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளை தாம் எதிர்ப்பதாகப்  பொருள் கொள்ள வேண்டாம் என்றும்,  பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக, ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு அவற்றை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments