ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய சுரேஷ் ரெய்னா - சி.எஸ்.கே அணிக்குப் பலத்த பின்னடைவு!

0 11870
சுரேஷ் ரெய்னா

.பி.எல் போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரரான சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சி.எஸ்.கே அணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 - ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக இந்தியாவிலிருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட எட்டு அணிகளும் போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளன.

image

ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சர்மா உள்ளிட்ட அணி நிர்வாகிகள் 13 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் தன் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவரான சுரேஷ் ரெய்னா நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரியான விஸ்வநாதன், “தன் சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியுள்ளார். இந்தத் தொடர் முழுவதும் அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார். இந்தக் கடினமான சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவுக்குத் துணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே அணியில் சிலருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா போட்டியிலிருந்து விலகியுள்ளது சென்னை அணிக்குப் பலத்த பின்னடைவாகவே கருதப்படுகிறது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments