தாயிடம் சொத்தை அபகரித்து, வீட்டை விட்டு விரட்டிய ஆயுதப்படை போலீஸ்காரர்! - நடவடிக்கை எடுக்காத காவல்துறை

0 11270
ரிசர்வ் படை போலிஸ் கோபிநாத் மற்றும் பாதிக்கப்பட்ட தாய்

ந்திய போலீஸ் பட்டாலியனில் (IRBN) பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர், தனது தாயாரிடமிருந்து சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு, அவரை  வீட்டை விட்டு துரத்தியுள்ளார். 

புதுச்சேரி தேங்காய்த் திட்டு பகுதியைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் IRBN போலீசாக உள்ள தன் மகன் கோபிநாத் உடன் வசித்து வந்தார். தனக்குப் பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய கோபிநாத், அம்மா பெயரிலிருந்த மனையை தன் பெயருக்கு எழுதி வாங்கி, ஒரு மாதத்துக்கு முன்பு ரூ. 8 லட்சத்துக்கு  விற்றுள்ளார். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டதும் கோபிநாத்தின் சுபாவம் மாறி தாயாரை தினமும் திட்டத் தொடங்கியுள்ளார். பெற்ற தாய் என்றும் பாராமல், லத்தியால் அடித்தும் காலால் எட்டி உதைத்தும் வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார் கோபிநாத்.

சொத்தையும் இழந்த மங்கையர்க்கரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், மங்கையர்க்கரசியின் மகன் ரிசர்வ் படை காவலராக இருப்பதால் காவல்நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். பத்து நாள்களாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் வீட்டுக்கு வெளியே சாலையில் தற்போது தங்கியுள்ளார்.

"வீட்டு  மனை விற்ற பணத்தைப் பெற்றுத் தந்தால் தான் வாடகைக்கு வீடு பார்த்தாவது என்னால் வாழமுடியும்” என்று  போலீஸாரிடம் மங்கையர்க்கரசி அழுதபடி கூறியுள்ளார். காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மேலதிகாரிகைளிடத்தில் புகாரளிக்க மங்கையர்க்கரசி முடிவு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments