ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு

0 526
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமைக் குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமைக் குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பால்க் மாவட்டத்தில் ராணுவத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 41 பேர் படுகாயமடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்க்கு பொறுப்பேற்றுள்ள தாலிபான் அமைப்பினர், தாங்கள் நடத்திய தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் சமாதான நிலையை பின்னுக்குத் தள்ளியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments