விமானப்படை பணியிடங்கள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம்

0 908

விமானப்படையில் உள்ள பணியிடங்கள் தொடர்பான தகவல்களை வழங்கக் கூடிய, புதிய செயலியை இந்திய விமானப்படைத் தளபதி பதாரியா அறிமுகப்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், MY IAF எனப்படும் அந்த செயலி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, விமானத்துறையில் சேர விரும்புவோருக்கு உதவக் கூடியதாய் இருக்கும் என கூறப்படுகிறது.

குறிப்பாக, விமானப்படை வீரர்களுக்கான தேர்வு நடைமுறை, பயிற்சி பாடத்திட்டம், ஊதியம் மற்றும் சலுகைகள் போன்ற விவரங்களை வழங்கும் டிஜிட்டல் தளமாக, இந்த செயலி இருக்கும் என விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments