மேட்டூர் அணை நீர் திறப்பு அளவு விநாடிக்கு 18,000 கனஅடியாக உயர்வு

0 7766
மேட்டூர் அணை நீர் திறப்பு அளவு விநாடிக்கு 18,000 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அணையிலுள்ள மின் நிலையங்களில் மின்னுற்பத்தி 333.7 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு அணை, சுரங்க, நீர்தேக்க மின் நிலையங்களில் 50, 200, 210 மெகாவாட் முறையே மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஜூன் 12 முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து முதற்கட்டமாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது படிப்படியாக 18 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அணை, சுரங்க, நீர்தேக்க மின் நிலையங்களின் மின்னுற்பத்தி 279.7 மெகாவாட்டிலிருந்து 333.7 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் காலை நிலவரப்படி நீர் மட்டம் 98.50 அடியாகவும், நீர் வரத்து 9,160 கன அடியாகவும் உள்ளது. அணையில் 62.91 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments