டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி கைது

0 1694
டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியை, துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியை, துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.

தென்மேற்கு டெல்லியில் தவுலா குவான் பகுதியில், கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி, 15 கிலோ வெடிபொருள் நிரப்பப்பட்ட இரண்டு குக்கர் வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

உத்தரப்பிரதேசம் பல்ராம்பூரை சேர்ந்த அபு யூசுப் என்ற அவன், தனி ஆளாக சென்று தாக்குதல் நடத்தும் லோன் வோல்ப் ("lone wolf attack") முறையில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து உத்தரப்பிரதேசம் பல்ராம்பூர், அயோத்தி பகுதியிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு குண்டுவைக்க தீவிரவாதி திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளால் சதித் திட்டத்தை அவன் அரங்கேற்ற முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments