ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை 40,000 பேர் மீது பரிசோதிக்க திட்டம்

0 1402
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு உள்நாட்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற முதற்கட்டமாக 40 ஆயிரம் பேர் மீது பரிசோதிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு உள்நாட்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற முதற்கட்டமாக 40 ஆயிரம் பேர் மீது பரிசோதிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 மாத சிறிய அளவிலான மனிதர்கள் மீதான சோதனைகளைத் தொடர்ந்து ஸ்புட்னிக் வி, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என்று அதிபர் விளாடிமிர் புதினால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையதாக ரஷ்யாவில் 45க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்களில் 40 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரம் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என்றும் இதை வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மேற்பார்வையிடும் என்றும் தயாரிப்பு நிறுவனமான கமலேயா தெரிவித்துள்ளது.

மேலும், உலகெங்கிலும் இருந்து ஒரு பில்லியன் டோஸ் தடுப்பூசிக்கான கோரிக்கைகளை ரஷ்யா பெற்றுள்ளதாக அந்நாட்டின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments