அரசு மருத்துவமனை கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தும் பணி தொடக்கம்

0 926
தமிழக அரசு மருத்துவமனைகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் வசதிக்காக, கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் வசதிக்காக, கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.

24 மணி நேரமும் ஆக்ஸிஜன் தேவையாக இருப்பதால்,கழிப்பறைகளுக்கு செல்லும் நேரங்களில் போதியளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

இதனால், தொடர் சிகிச்சை மூலம் தேறி வருபவர்களும், உடல்நலன் குன்றி அபாயகரமான நிலைக்கு சென்றுவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து  முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைக்கு வெளியே ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments