உ.பி.யில் கல்லூரி மாணவி மானபங்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? போலீசார் கூறுவது என்ன?

0 967
உத்தரப்பிரதேசத்தில் வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மானபங்கத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது மரணம் விபத்துதான் என்று போலீசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மானபங்கத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது மரணம் விபத்துதான் என்று போலீசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

புலந்தர்சகர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவியை இரண்டு பேர் புல்லட்டில் விரட்டி விரட்டி மானபங்கம் செய்து கொலை செய்ததாக சர்ச்சை எழுந்தது.ஆனால் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மாணவி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

புல்லட்டில் வேகமாக கடந்து சென்ற இருவர் எதிரே வந்த வாகனத்தைக் கண்டு திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்துக் கொண்டிருந்த சுதிக்சாவின் இருசக்கர வாகனம் முன்னால் இருந்த புல்லட் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

புல்லட்டில் பயணித்த தீபக் என்பவர் தமது பைக் விபத்துக்குள்ளானதாலும் மாணவி கொல்லப்பட்டதாக செய்திகள் பரவியதாலும் பயந்து போய் வாகனத்திற்கு பெயின்ட் அடித்து நிறத்தை மாற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த புல்லட்டை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments