வரதட்சணைப் புகார்கள் கொடுத்து வசூல் வேட்டை... வசமாக சிக்கிய பெண்

0 2406
வரதட்சணைப் புகார்கள் கொடுத்து வசூல் வேட்டை

தெலுங்கானாவில் ஏற்கனவே இருவரை திருமணம் செய்து வரதட்சணைப் புகார் கொடுத்து பணம் பறித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் 3வதாக ஒருவரை திருமணம் செய்து அவர் மீதும் வரதட்சணைப் புகார் கொடுத்ததோடு, இழப்பீடு கேட்டு தண்ணீர் டேங்க் மீது ஏறி போராட்டம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரீம்நகர் மாவட்டம் மனகொடூர் பகுதியை சேர்ந்த ரவளி என்ற அந்தப் பெண், கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்றே மாதங்களில் அவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்து 3 லட்ச ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.

2வதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்தே மாதங்களில் அவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகக் கூறி புகாரளித்து 3 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். கடைசியாக சுரேஷ் என்பவரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தவர், அவரும் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகக் கூறி மனக்கோடூரிலுள்ள தண்ணீர் டேங்க் ஒன்றின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.

அவரை சமாதானம் செய்து கீழே இறக்கிய போலீசார், 3வது கணவர் கொடுத்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments