மோசமான சாதனையை படைத்த சஞ்சய் தத், ஆலியா பட்டின் சடக்-2 பட ட்ரெய்லர்

0 12907

இந்தியில் சஞ்சய் தத், ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் சடக்-2 படத்தின் ட்ரெய்லர், யூடியூபில் அதிக டிஸ்லைக்குகளை பெற்ற வீடியோ என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் ட்விட்டரில் களமாடி வரும் சுசாந்த்தின் ரசிகர்கள், பல்வேறு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தும், வாரிசு நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில், திரையுலக பின்புலம் கொண்ட சஞ்சய் தத், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள, சடக் 2 படத்தின் ட்ரெய்லர் நேற்று யூடியூபில் வெளியானது.

அடுத்த சில நிமிடங்களிலேயே அப்படத்திற்கு ஏராளமான டிஸ்லைக்குகள் குவிய, இதுவரை 45 லட்சத்திற்கும் அதிகமான டிஸ்லைக்குகளை அந்த வீடியோ பெற்றுள்ளது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட ரீவைண்ட் 2018 என்ற வீடியோ 18 லட்சத்திற்கும் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments