கீரம்பூர் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் போராட்டம்

0 1062

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கீரம்பூர் ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் முறையாக மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு ஒப்பந்த பணியாளர்களாக 100க்கும் மேற்பட்டோர் சுங்கம் வசூலிப்பது, பாதுகாப்பு மற்றும் துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி 4 மாத காலமாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல் 4 மணி வரை பணியில் இருந்து அந்த வழியாகச் செல்லும் வாகனங்களில் வசூல் செய்யப்பட்ட பணத்தை முறையாக கணக்கரிடம் ஒப்படைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments