தமிழகத்தில் இன்று புதிதாக 5914 பேருக்கு கொரோனா தொற்று : 114 பேர் பலி

0 7495
தமிழகத்தில் புதிதாக 5914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக  5 ஆயிரத்து 914 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது.

6 ஆயிரத்து 37 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டதால்,  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரே நாளில் 67 ஆயிரத்து 153  மாதிரிகளுக்கு கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அதிகபட்சமாக114 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக்கை 5  ஆயிரத்தை கடந்து விட்டது. திருவள்ளூரைச் சேர்ந்த 4 மாத பெண் குழந்தை, தூத்துக்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்  ஆகியோரும் உயிரி ழந்தோரில் அடங்குவர். சென்னையில் மேலும் 976 பேருக்கும்,  செங்கல்பட்டில் 483 நபர்களுக்கும், திருவள்ளூரில் 399 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 310 நபர்களுக்கும்,  தேனியில்  357 நபர்களுக்கும் ,புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments