ஐந்து மாதங்களுக்குப் பின் தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன

0 1770

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதன் எதிரொலியாக, ஐந்து மாதங்களுக்குப் பின் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது.

அதன்படி, மையங்களில் உள்ள உடற்பயிற்சி இயந்திரங்கள், வலுதூக்கும் சாதனங்கள், கைப்பிடிகள் போன்றவை கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டன. தனியார் உடற்பயிற்சி மையங்களுக்கு வந்தவர்கள், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

பயிற்சி மேற்கொள்வோரின் உடல் வெப்பநிலை, உடலில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டன. பயிற்சியின்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. உடற்பயிற்சியில் ஈடுபடும் முன் உடலின் ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments