அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு

0 17945
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி வெளியாகியுள்ளது. நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி வெளியாகியுள்ளது. நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது. இந்திய கட்டிடக் கலையின் தனிச்சிறப்பான உதாரணமாக ராமர் கோவில் அமையும் என்றும், பிரம்மாண்டத்தையும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ராமர் கோவில் அமையும் என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் எப்படி அமையும் என்பதை வடிவமைத்துள்ள கட்டிடக் கலைஞரான சந்திரகாந்த் சோம்புரா, முதலில் திட்டமிட்டதைவிட அளவில் இருமடங்கு பெரிதாக கோவில் இருக்கும் என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில் இரண்டு கோபுர அமைப்புகளுக்கு திட்டமிட்ட நிலையில், 5 கோபுர அமைப்புகள் கொண்டதாக கோவில் அமையும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments