கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

0 665
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், டீசல் டிரக் வெளியேற்றும் சூடான கார்பனால் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், டீசல் டிரக் வெளியேற்றும் சூடான கார்பனால் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் செர்ரி பள்ளத்தாக்கில் கடந்த வாரம் ஏற்பட்ட ஆப்பிள் பயர் என்றழைக்கப்படும் காட்டுத்தீ, ரிவர்சைடு கவுண்டிக்கு பரவி 26 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் எரிந்து நாசமானது.

இந்த நிலையில், பழுதான டீசல் டிரக்கில் இருந்து வெளியேற்றப்படும் சூடான கார்பனால் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத்தீயால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெர்னார்டினோ காடுகளுக்கு தீ பரவி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments