சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்க ஆப்பிள் ஒப்பந்த நிறுவனங்கள் திட்டம்

0 4337

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

கொரோனா பரவலையடுத்துச் சீனாவில் இருந்து பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. அவற்றை இந்தியாவில் தொழில் தொடங்க வரவேற்கும் வகையில் ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஸ்மார்ட்போன்கள் தயாரித்து வழங்கும் விஸ்ட்ரான், பெகாட்ரான், பாக்ஸ்கான் ஆகியவை உட்பட 22 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்கள், உள்நாட்டுத் தேவைக்குப் போக 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளன. ஐபோன்கள் மட்டுமின்றிக் கணினிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றையும் இவை தயாரிக்க உள்ளதால் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments