மதுவுக்குப் பதிலாக சானிட்டைசரைக் குடித்த 10 பேர் உயிரிழப்பு

0 12443
ஆந்திராவில் மதுவுக்கு பதிலாக சானிட்டைசர்களை போதைக்காக குடித்த துப்புரவு தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் மதுவுக்கு பதிலாக சானிட்டைசர்களை போதைக்காக குடித்த துப்புரவு தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிரகாசம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாகவே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. பக்கத்து மாவட்டங்களிலும் மது வகைகள் மூன்று மடங்கு அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

எனவே கூலித் தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளர்கள், யாசகர்கள் உள்ளிட்டோர் அரசு சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சானிட்டைசர்களை போதைக்காக குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு குரிப்பெடு என்ற இடத்தில் சானிட்டைசர்களைக் குடித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments