தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா, 82 பேர் பலி..!

0 5593
தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 33 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். இதுவரை, கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாகையில் 20 வயது இளம்பெண், அரியலூரில் 22 வயது இளம்பெண் உள்பட ஒரே நாளில், 82 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

நோய் தொற்றில் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் மேலும் குணமடைந்தனர். தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட சுமார் 57 ஆயிரத்து 500  பேர் , பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 117 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 540 நபர்களும், திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலியில் தலா 382 பேரும், காஞ்சியில் 373 நபர்களும், விருதுநகரில் 370 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments