நாளை மறுநாள் வெளியாகிறது 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

0 8658
11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மற்றும் 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வரும் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மற்றும் 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வரும் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் எனவும்,  மாணவர்களுக்கு பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் முடிவுகள் அனுப்பப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments