பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

0 738
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கெனவே 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பாதியைக் கூட நிரப்பாமல் வஞ்சித்துள்ள நிலையில், இப்போது கிரீமிலேயர் வருமான வரம்புக்கு நிகரச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது இடஒதுக்கீட்டுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

1993ஆம் ஆண்டில் ஒரு லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயருக்கான வருமான வரம்பு, 27 ஆண்டுகளில் 9 முறை உயர்த்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில் நான்கு முறையே உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 15 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் எனத் தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்ததையும், 20 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் எனப் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு மீதான தாக்குதலைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments