தங்கம் விலை சவரனுக்கு 39 ஆயிரம் ரூபாயை தாண்டியது

0 4004
தங்கம் விலை சவரனுக்கு 39 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 39 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் (22ம் தேதி) சவரன் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதையடுத்து நேற்று 38 ஆயிரத்து 776 ரூபாயாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 879 ரூபாயாக உயர்ந்திருந்தது. இது நேற்றைய கிராம் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் 32 ரூபாய் அதிகமாகும். இதேபோல் சவரன் தங்கம் விலையும் 256 ரூபாய் கூடியுள்ளது.

இதனால் சவரன் தங்கத்தின் விலை 39 ஆயிரத்து 32 ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதிகரித்த போதிலும் வெள்ளி விலை இன்று லேசாக குறைந்துள்ளது. நேற்று 67 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை இன்று 800 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 600 ரூபாயாக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments