உச்சநீதிமன்றத்தில் சச்சின் பைலட் கேவியட் மனு தாக்கல்

0 1579
உச்சநீதிமன்றத்தில் சச்சின் பைலட் கேவியட் மனு

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கில், வரும் வெள்ளிக்கிழமை வரை சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது கருத்தை கேட்காமல் சபாநாயகர் மனு மீது உத்தரவிடக் கூடாது என்று கூறி, சச்சின் பைலட் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments